கேரள மக்கள் பயப்பட தேவையில்லை: முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது - உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தாமஸ் தகவல்

கேரள மக்கள் பயப்பட தேவையில்லை: முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது - உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தாமஸ் தகவல்
Updated on
1 min read

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது. கேரள மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.டி. தாமஸ் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் பத்தினம்திட்டாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கே.வி. தாமஸ் கூறியதாவது: முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை கொடுப் பதற்காக ஏற்படுத்தப்பட்ட, உயர் நிலைக் குழுவில் உறுப்பினராக நான் இருந்தபோது, அணை பாதுகாப்பாக உள்ளதாக அறிக்கை சமர்ப்பித்தேன்.

அணையின் நீர்மட்டத்தை மேலும் உயர்த்துவதால், அணை யின் உறுதித் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தேன். எனது கருத்தை கேரளத்தின் அப்போதைய அமைச்சர்களாக இருந்த பி.ஜே.ஜோசப், ரமேஷ் சென்னிதலா உட்பட பலர் தனிப்பட்ட முறையில் வரவேற் றனர். அணையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை கேரளா வுக்கு வழங்க ஏற்பாடு செய்யும் ப டி, என்னிடம் அவர்கள் கூறினர். மேலும் அணை பாதுகாப்பாக உள்ளதால், அணையை பார்வை யிட்டு பாதுகாக்கும் உரிமை தங்க ளுக்குக் கிடைக்குமா? என்றும் கேட்டனர்.

இதுகுறித்து தமிழக அதிகாரி களிடம் தெரிவித்தேன். அவர்கள் தமிழக அரசிடம், பேசி மின்சா ரத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை கேரளாவுக்கு வழங்குவது உட்பட சில கோரிக்கைகளை ஏற்பதா கத் தெரிவித்தனர். ஆனால், அணையில் உற்பத்தி செய்யப்ப டும் மின்சாரத்தை வாங்கினால் அணை பாதுகாப்பாக உள்ளது என்று கேரளா ஒப்புக்கொண்ட துபோல ஆகிவிடும்.

எனவே எங்களுக்கு மின்சாரம் வேண்டாம் என அப்போதைய முதல்வராக இருந்தவர் கூறினார். இதன் காரணமாகவே, பெரியாறு அணை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில் லை, அணையின் பாதுகாப்பு குறித்து தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்த கருத்து கேரள மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதாக சிலர் கூறுகின்றனர். அது சரியல்ல. முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கேரளா அரசு ஏற்க வேண்டும்.

அணையின் உறுதித் தன்மை குறித்து கேரள மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தமிழக அரசிடம் கலந்து பேசி தேவையான அளவு மின்சாரத்தை கேட்டு பெற்றுக்கொள்ள கேரள அரசு முன்வர வேண்டும். ஆனால், பெரியாறு அணை பலமிழந்துவிட்டதாக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், தோல்வியைத்தான் சந்திக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித் தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in