

சென்னையில் வார்தா புயலால் இழந்த பசுமைப் போர்வையை மீட்டெடுக்கும் விதமாக ‘பசுமை சென்னை’ என்ற கருப்பொருளை ‘தி இந்து’ குழுமம் உருவாக்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நாளை (சனி), நாளை மறுநாள் (ஞாயிறு) ஆகிய 2 நாட்களும் இப்பணிகள் நடக்க உள்ளன.
முக்கியத்துவம் வாய்ந்த, சென்னையின் பசுமைப் போர்வையை மீட்டெடுக்கும் பணியில், விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு அடைப்புக்குறிகளில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
நாளை (சனி) காலை 7 மணிக்கு இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறக்கட்டளை சார்பில் நன்மங்கலத்தில் வெள்ளக்கல் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள வனப் பகுதி (9677097824), மண்ணிவாக்கம் கரசங்கால் ஏரி (9710737582) ஆகிய பகுதிகளிலும், மாலை 4 மணிக்கு அரசங்கழனி ஏரி (9677097824) பகுதியிலும் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
நாளை மறுநாள் (ஞாயிறு) காலை 7 மணிக்கு நன்மங்கலம் - ஜெயேந்திர நகர் வனப் பகுதியில் (9600138183) மரக்கன்றுகள் நடும் பணி, மேற்கு மாம்பலம் கிட்டு பூங்காவில் (9677097824) மரம் நடுவது குறித்த விழிப்புணர்வு சுவர் ஓவியம் வரையும் நிகழ்ச்சி, கரசங்கால் ஏரிக்கரையை (9710737582) தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை 3 மணிக்கு ஆதம்பாக்கம், கீழ்க்கட்டளை, சித்தாலப்பாக்கம், அரசங்கழனி ஆகிய பகுதிகளில் (9677097824) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் நடக்க உள்ளது.
இதுமட்டுமல்லாது, சிடிசி ஐந்திணை அமைப்புடன் இணைந்து பழைய மகாபலிபுரம் சாலையில் பூஞ்சேரி பகுதியில் (9551055536) காலை 6.30-க்கு மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. நிழல் அமைப்புடன் இணைந்து, மாதவரத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் அருகில் உள்ள மரப்பூங்காவில் (9840444010) சேதமடைந்த மரங்கள் சீரமைக்கப்பட உள்ளன.