

குடியிருப்பு பகுதிகளில் பாது காப்பு முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து குடியிருப் போர் சங்க நிர்வாகிகளுடன் போலீஸார் கலந்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டம், சென்னை யில் நேற்று சுமார் 200 இடங்களில் நடத்தப்பட்டது.
புதுவண்ணாரப்பேட்டை பகுதி யில் உள்ள பிருந்தாவன் நகரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் டி.கே. ராஜேந்திரன், கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார். துணை ஆணையாளர் செல்வக் குமார் உடனிருந்தார்.
போலீஸார் சார்பில் கீழ்க்கண்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
அடுக்குமாடி குடியிருப்புகளின் நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அடையாளம் தெரியாத நபர்கள் குடியிருப்பை அணுகும்போது செல்போனில் அலர்ட் செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும். செக்யூரிட்டி ஆட்களை நியமிக்கும் போது அவர்களின் நன்னடத்தை விவரங்களை அறிந்து பணி யமர்த்த வேண்டும். வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வெளியில் வந்து இருப்பவர்கள் யார் எனத் தெரிந்துகொள்ள வசதியாக கதவுகளின் மைய பகுதியில் லென்ஸ் பொருத்த வேண்டும். வீடுகளில் வாடகைக்கு புதியதாக குடியிருக்க வரும் நபர்களை பற்றி முறையாக விசாரித்த பின்பே குடியமர்த்த வேண்டும். குடியிருப்புகளில் தனியாக வசிக்கும் முதியோர் பற்றிய விவரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஏராளமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
திருவல்லிக்கேணி விஜய் அவென்யூ பகுதியில் நடந்த ஆலோ சனை கூட்டத்தில் காவல் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி ஆலோசனைகளை வழங்கினார்.