

உலகம் முழுக்க பரவியுள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றை ஆவ ணப்படுத்தும் முயற்சியில், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உள்ள `புலம்பெயர் ஆய்வு மையம்’ ஈடுபட்டுள்ளது.
பஞ்சாப், ஹைதராபாத், குஜராத், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகங்களில், புலம்பெயர் ஆய்வு மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் இந்தியர்கள் மற்றும் அந்தந்த மாநில மொழிகளைப் பேசுவோர் புலம்பெயர்ந்திருந்தால் அவர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் படுகிறது. அது தொடர்பான கல்வியையும் மாணவர்கள் கற்கின் றனர். அதுபோலவே, தமிழர் களின் புலம்பெயர்தல் குறித்து ஆய்வு மற்றும் கல்வி போதிக்கும் மையமாக மனோன்மணியம் சுந்த ரனார் பல்கலைக்கழக புலம்பெயர் ஆய்வு மையம் செயல்படுகிறது.
அதிர்ச்சி ஆவணப்படம்
இரண்டாம் உலகப்போரின் போது தாய்லாந்து (சயாம்)- பர்மா இடையிலான ரயில்பாதை அமைப்பதற்காக அடிமைகளாக உழைத்து, இறுதியில் கொல்லப் பட்ட லட்சக்கணக்கான தமிழர்களைப் பற்றிய, `சயாம்- பர்மா மரண ரயில்பாதை’ என்ற தலைப்பிலான ஆவணப் படத்தை சமீபத்தில் சென்னையில் திரையிடுவதில் இம் மையம் முக்கிய பங்காற்றி யது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் இதை திரையிட்டுள்ளனர். பேராசிரியர் குறிஞ்சி வேந்தன் இயக்கிய அதிர்ச்சியூட்டும் இந்த ஆவணப்படத்தை திருச்சி, மதுரை உள்ளிட்ட பிற நகரங்களிலும் திரையிடுவதற்கு திட்டமிடப்பட் டுள்ளது.
நெல்லையில் அதிகம்
இம் மையத்தின் இயக்குநர் சாமுவேல் ஆசிர்ராஜ் கூறியதா வது:
உலகின் பல்வேறு நாடுகளுக் கும் கடந்த பல நூற்றாண்டுகளாக தமிழர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். தற்போதும் இது தொடர்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தி லிருந்து அதிகமானோர் உலக நாடுகள் பலவற்றில் குடியேறியுள்ளனர். தென்காசி, கடையநல்லூர் பகுதி முஸ்லிம்கள் பலர் 3 தலைமு றைகளாக மலேசியாவில் தமிழ் பள்ளிகளை நடத்தி வருகின்றனர்.
18-ம் நூற்றாண்டின் கடைசி, 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பத்தமடையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பாய் ஏற்றுமதி செய் யப்பட்டுள்ளது. மேலப்பாளை யம், காயல்பட்டினம் பகுதிகளில் இருந்து வியாபாரம் நிமித்தம் பலர் இடம்பெயர்ந்துள்ளனர். பணகுடி, காவல்கிணறு, வடக்குன்குளம் பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்த பலரும், தற்போது உறவினர் வீட்டு விழாக்களுக்கு மட்டும் வந்து செல்கின்றனர்.
தோட்டவேலை, கட்டிடப் பணி களுக்காக பல நாடுகளுக்குச் சென்று தமிழர்கள் குடியேறி யுள்ளனர். அவர்கள் அந்தந்த நாட்டு தமிழர்களாக மாறிவிட்டனர். அவர்களை குறித்தும், பண்பாடு, கலாச்சார மாற்றங்கள், அந்நிய செலவாணி, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்தெல் லாம் பல்வேறு கோணங்களில் இம் மையத்தில் ஆய்வு மேற்கொள் ளப்படுகிறது.
முதுகலை, ஆய்வு படிப்பு
இம் மையத்தில் முதுகலை, முனைவர் பட்ட ஆய்வு படிப்பு களை மாணவர்கள் மேற்கொள்ள லாம். தமிழகத்தில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் குறித்து தமிழக அரசு உதவியுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டு முடித்துள்ளோம். என்னோடு, திருவனந்தபுரத்திலுள்ள வளர்ச்சிக் கான கல்வி மைய பேராசிரியர் எஸ்.இருதயராஜன், சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் பெர்னார்டு ஆகியோர் இணைந்து இந்த ஆய்வை நடத்தி அரசிடம் அறிக்கை அளித்துள் ளோம்.
அரசு உதவி
கடந்த 1830-ல் இருந்து தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்கி தற்போதும் நிகழ்ந்து வருவது ஆய்வில் தெரியவந் துள்ளது. ஒவ்வொரு மாவட்டத் திலிருந்தும் எத்தனை பேர் புலம்பெயர்ந்துள்ளனர், அதற்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளோம். இந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படை யில் புலம்பெயர்ந்த தமிழர்களின் நல்வாழ்வு, அவர்களுக்கான உதவிகளை அளிப்பது, அந்தந்த நாடுகளில் அவர்கள் மீதான மனித உரிமை மீறல்களை தடுப்பது உள்ளிட்ட அம்சங்களில் அரசு திட்டமிடும் என்று எதிர்பார்க்கலாம்.
வரும் அக்டோபரில் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கான பிரச் சினைகள் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற கருத்தரங்குகளில் விவாதிக்கப் படும் கருத்துகள், சமர்ப்பிக்கப்படும் ஆய்வு கட்டு ரைகளை தொகுத்து புத்தகமாக ஆவணப்படுத்த இம் மையம் திட்ட மிட்டுள்ளது. எங்களது ஆய்வுகள் அனைத்தும் அரசுக்கு அளிக்கப்ப டும். அதன்மூலம் புலம்பெயர்ந்த இந்தியர்கள், தமிழர்களுக்கான திட்டங்கள் குறித்து அரசு திட்ட மிட வழி ஏற்படும்’’ என்றார் அவர்.