தீபாவளிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை: சிறப்பு ஏற்பாடு

தீபாவளிக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை: சிறப்பு ஏற்பாடு

Published on

தமிழகம் முழுவதும் அவசர உதவி சேவையில் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 684 ஆம்புலன்ஸ்கள் ஓடுகின்றன. மற்ற நாட்களை விட தீபாவளி தினத்தன்று, விபத்துகள் அதிகம் நடக்க வாய்ப்புள்ளதால், சிறப்பு ஏற்பாடுகளை 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் செய்துள்ளது.

இதுதொடர்பாக 108 ஆம்புலன்ஸ் விழிப்புணர்வு பிரிவு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தினமும் 16 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. தீபாவளி தினத்தில் அழைப்புகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் 2,500 பேர் பயனடைந்தனர். இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் 108 ஆம்புலன்ஸ் மற்றும் 104 மருத்துவ சேவை கட்டுப்பாடு அறை பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள்.

அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 104 மருத்துவ சேவைக்கு போன் செய்பவர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்குவதற்காக ஆலோசகர் மற்றும் டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு துறையினரும் 108 சேவையுடன் இணைந்து செயல்பட இருக்கின்றனர். இந்த தீபாவளியை விபத்து இல்லா தீபாவளியாக அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in