Published : 07 Apr 2017 07:41 AM
Last Updated : 07 Apr 2017 07:41 AM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி வருகை: 70 நுண் பார்வையாளர்கள், 10 கம்பெனி துணை ராணுவம் ரோந்து

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்ட விக்ரம் பத்ரா, தனது பணியை நேற்று தொடங்கினார். பணப் பட்டுவாடாவை தடுக்க 70 நுண் பார்வையாளர்கள் இருசக்கர வாகனத்தில் தொகுதி முழுவதும் ரோந்து செல்கின்றனர்.

பாதுகாப்பு பணிக்காக இதுவரை 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஆர்.கே.நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் காலியாக உள்ள 10 சட்டப்பேரவை மற்றும் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் தமிழ கத்தின் ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியும் ஒன்று. பல பகுதிகளில் தேர்தல் நடந்தாலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்தான் தேர்தல் ஆணையம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அரசியல் கட்சிகள் அளிக்கும் புகார்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை களை எடுத்து வருகிறது. காவல் துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர்.

இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் ஆர்.கே. நகரில் 5-க்கும் மேற்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். மேலும் நுண் பார்வையாளர்கள், துணை ராணு வத்தினர் ரோந்து, சிசிடிவி கண் காணிப்பு என ஆர்.கே.நகர் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.

இந்நிலையில், தொப்பி சின்னத் தில் போட்டியிடும் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகர னுக்கு ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு ரூ.4 ஆயிரம் வரை பணம் விநியோகிக்கப்பட்ட தாக திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தன. அதற்கான புகைப்பட, வீடியோ ஆதாரங்களும் அளிக்கப்பட்டன.

இதே புகாரை திமுக எம்.பி. திருச்சி சிவா டெல்லியில் தேர்தல் ஆணையத்திலும் அளித்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி பக்கம் முழு கவனத்தையும் தேர்தல் ஆணையம் திருப்பியுள்ளது.

சிறப்பு அதிகாரி நியமனம்

புகார்கள் அதிக அளவில் வருவ தால், சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரியாக, தேர்தல் ஆணையத்தின் செலவினப்பிரிவு இயக்குநராக உள்ள விக்ரம் பத்ராவை நேற்று முன்தினம் இரவு நியமித்தது. அவர் நேற்று பிற்பகல் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். முதலில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். பின்னர், ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்ட வர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘‘விக்ரம் பாத்ராவை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்காகவே தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவர் முழுமையாக தேர்தலை கண்காணிப்பதுடன், பணியில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவார். திமுக உள்ளிட்ட கட்சிகள் அளித்த புகார்கள் மீது மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்களது விளக்கத்தை தேர்தல் ஆணையத் துக்கு அனுப்புவோம். தேர்தல் பார்வையாளர்களுக்கும் இந்த மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள் விசாரணை நடத்தி தேர்தல் ஆணையத்துக்கு நேரடியாக அறிக்கை அனுப்புவார்கள்’’ என்றார்.

பார்வையாளர்கள் ரோந்து

ஆர்.கே.நகரில் அதிக அளவில் பணப் பட்டுவாடா புகார்கள் வரு வதைத் தொடர்ந்து, நாட்டிலேயே முதல்முறையாக நுண் பார்வை யாளர்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்லும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது தொடர் பாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறிய தாவது:

நுண் பார்வையாளர்கள் 70 பேர், வாகனங்கள் செல்ல முடியாத தெருக்களில் இருசக்கர வாகனத் தில் சென்று முறைகேடுகளை கண்காணிப்பார்கள். மத்திய அரசுப் பணியாளர்களான இவர்களுடன் ஒரு காவலரும் செல்வார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தகவல் வந்தால் உடனுக்குடன் சம்பவ இடத்துக்கு சென்று நடவடிக்கை எடுப்பார்கள்.

இவர்கள் 3 ஷிப்ட் அடிப்படையில் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். கூட்டம் அதிகமான இடங்களில் சோதனையிடுவதுடன், சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தவும் இவர் களுக்கு அதிகாரம் உண்டு. ஏப்ரல் 12-ம் தேதி வரை பணியில் இருக்கும் இவர்கள், 256 வாக்குச் சாவடிகளையும் கண்காணிப் பார்கள். இவர்களுடன் 30 பறக்கும் படைகளும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

ஆர்.கே.நகரில் நேற்று (5-ம் தேதி) ஒரே நாளில் ரூ.14 லட்சம் ரொக்கம் பிடிபட்டுள்ளது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம் சிக்கியது தொடர்பான வீடியோ ஆதாரம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

துணை ராணுவம் அதிகரிப்பு

ஆர்.கே.நகர் தேர்தலை பொறுத்தவரை மாநில காவல் துறையினர் எண்ணிக்கையைவிட துணை ராணுவப் படையினர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒருபுறம் மாநில காவல்துறை யினரை மாற்றிவிட்டு, புதிதாக அதிகாரிகளை தேர்தல் ஆணை யம் நியமித்து வருகிறது. மற்றொரு புறம், இதுவரை 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஆர்.கே.நகருக்கு வந்துள்ளனர். மேலும், கூடுதலாக துணை ராணுவத் தினரை வரவழைக்க வாய்ப்பிருப் பதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 256 வாக்குச் சாவடிகள், பறக்கும் படைகள் என அனைத்திலும் மாநில காவலர் களுடன் 3 அல்லது 4 துணை ராணுவத்தினர் இடம்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதிக அளவிலான புகார்கள், பணப் பட்டுவாடா, தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், துணை ராணுவம் குவிப்பு என ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x