தங்கம் விலை ரூ.23 ஆயிரத்தை தாண்டியது

தங்கம் விலை ரூ.23 ஆயிரத்தை தாண்டியது
Updated on
1 min read

தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.472 உயர்ந்து ரூ.23,352-க்கு விற்கப் பட்டது.

தங்கத்தில் முதலீடு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஆசிய நாடுகளில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.472 உயர்ந்து ரூ.23,352-க்கு விற்கப்பட்டது. 22 காரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2,919-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2,860-க்கு விற்கப் பட்டது. 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு பிறகு தற்போதுதான் இந்த அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in