மெட்ரோ ரயில் நிலையங்களில் சோலார் மின்விளக்குகள் பொருத்த திட்டம்

மெட்ரோ ரயில் நிலையங்களில் சோலார் மின்விளக்குகள் பொருத்த திட்டம்
Updated on
1 min read

மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் முதல் கட்டமாக 25 சோலார் மின்விளக்குகளை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மெட்ரோ ரயில் நிறு வனத்தில் ரயில்கள் இயக்கம், ஏசி, லிப்ட், ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர்களை இயக்குவது ஆகியவற்றுக்கான மின்சார செலவு அதிகமாக உள்ளது. எனவே, மின்சாரத்தை சேமிக்கும் வகையில் சோலார் மின்சாரத்தை பயன்படுத்தவுள்ளோம். இதற்காக மெட்ரோ ரயில் நிலையங்களின் மேற்கூரைகளில் சோலார் கருவிகளைப் பொருத்தி மின்சாரம் தயாரிக்கவுள்ளோம். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், முதல்கட்டமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் தேர்வு செய்யப்பட்ட சில இடங்களில் சோலார் மின்விளக்குகள் அமைக்க வுள்ளோம். ஒவ்வொன்றும் 50 வாட்ஸ் திறன் கொண்ட 25 சோலார் மின்விளக்குகள் வாங்க ரூ.10 லட்சம் மதிப்பில் டெண்டர் வெளியிடப் பட்டுள்ளது. இதில், ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து, சோலார் மின்விளக்குகள் பயன்படுத் தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in