கிருஷ்ணா நீர் தமிழக எல்லையை தொட்டது

கிருஷ்ணா நீர் தமிழக எல்லையை தொட்டது
Updated on
1 min read

கிருஷ்ணா நதி நீர் மீண்டும் நேற்று தமிழக எல்லையை தொட்டது.

சென்னையின் குடிநீர் தேவைக்காக, தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளுக் கிடையே போடப்பட்ட தெலுங்கு- கங்கை ஒப்பந்தத்தின்படி, ஆண்டுதோறும் இரு முறை, கிருஷ்ணா நதி நீரை தமிழகத் துக்கு ஆந்திர அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலி ருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பூண்டி ஏரிக்கு திறந்து விடப்பட்டது.

இந்நிலையில், கண்டலேறு அணையில் நீர் மட்டம் குறைந்ததால் கடந்த மாதம் 16 ம் தேதி கிருஷ்ணா நீர், பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. நீர் வரத்து நின்றுவிட்டதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் குறைந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு அதிகாரிகள், ஆந்திர அரசு அதிகாரி களிடம் கிருஷ்ணா நதி நீரை திறந்து விடுமாறு கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கை யின்படி, கண்டலேறு அணையிலிருந்து கடந்த 12-ம் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தொடக்கத்தில் வினாடிக்கு 200 கன அடி திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர், படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது வினாடிக்கு ஆயிரம் கன அடிக்கு வந்து கொண்டிருக்கிறது.

நேற்று மாலை 4 மணிக்கு தமிழக எல்லையான திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள தாமரைக்குப்பம் கிராமத்தில் உள்ள ஜீரோ பாயிண்ட்டை கிருஷ்ணா நதி நீர் அடைந்தது. அப்போது 7.62 கன அடியாக இருந்த கிருஷ்ணா நதி நீர், ஜீரோ பாயிண்ட்டிலிருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று மாலை(18-ம் தேதி) சென்றடையும் என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜீரோ பாயிண்ட்டுக்கு 7.62 கனஅடியாக இருந்த கிருஷ்ணா நதி நீர், அங்கிருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியான பூண்டிக்கு இன்று வந்து சேரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in