வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
Updated on
1 min read

வெப்பச்சலனம் காரணமாக தமிழ கத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது:

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சில இடங் களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 150 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாரண் டஹள்ளியில் 140 மில்லி மீட்டர், திண்டிவனத்தில் 130 மில்லி மீட்டர், திருப்புவனத்தில் 120 மில்லி மீட்டர், பாலக்கோட்டில் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.

செஞ்சி, தேன்கனிக்கோட்டை, சங்ககிரி, சூளகிரி, ஓசூர், மதுரை விமான நிலையம், பள்ளிப்பட்டு, திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் தலா 80 மில்லி மீட்டர், துவாக்குடி, பர்கூர், ஆர்.கே.பேட்டை, மயிலம், தருமபுரி, பையூர், திருமங்கலம் ஆகிய இடங்களில் தலா 70 மில்லி மீட்டர், பேரையூர், திருச்செங்கோடு, ராமநாதபுரம், தர்மபுரி, ஆடுதுறை, அஞ்சட்டி, கிருஷ்ணகிரி, மேல் ஆலத்தூர், ஆலங்குடி, சங்க ராபுரம், சோளிங்கர் ஆகிய இடங்களில் தலா 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ராசிபுரம், பேணுகொண்டாபுரம், அதிராமபட்டினம், பவானி, ஓமலூர், சிவகங்கை, குமாரபாளையம், திருச்சி விமான நிலையம், கீரனூர், போச்சம்பள்ளி, வேலூர், ராயக் கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவண்ணாமலை, கொடைக் கானல் ஆகிய இடங்களில் தலா 50 மில்லி மீட்டர், சேந்தமங்கலம், விரிஞ்சிபுரம், ஊத்தங்கரை, பெருங் களூர், வானூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 40 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.

சேலம், திருப்பத்தூர், வாலாஜா, கந்தர்வக்கோட்டை உள்பட 11 இடங் களில் தலா 30 மில்லி மீட்டர், மங்க ளாபுரம், விழுப்புரம், ஆலங்காயம் உள்பட 25 இடங்களில் தலா 20 மில்லி மீட்டர், அன்னூர், மதுரை, தாத்தையங்கார்பேட்டை, செங்கம், திருப்பூர் உள்பட 40 இடங்களில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in