

கிராம மக்களுக்கு இணையம் மூலம் அரசின் சேவைகளை வழங்கும் மத்திய அரசின் ‘பாரத் நெட்’ திட்டத்தை தமிழகத்தில் ரூ.3 ஆயிரம் கோடியில் செயல்படுத்துவது தொடர்பான ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தானது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘அனைத்து மாநிலங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளை இணையம் மூலம் இணைத்து அரசின் சேவைகளை பொதுமக்கள் பெற்று, அதன் மூலம் பயன்பெறும் வகையில் ‘பாரத் நெட்’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டம் தமிழக அரசின் மூல மாகத்தான் செயல்படுத்தப்பட வேண்டும் என்று நான் வலி யுறுத்தியதன் அடிப்படையில் மத்திய அரசும் தமிழகத்திலேயே செயல்படுத்த ஒப்புதல் அளித் துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளும், ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்கப்படும். தமிழக அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள், தங்கள் கிராமங் களில் இருந்தே இணையம் மூலம் பெற்று பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை ரூ.3 ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழக அரசே செயல்படுத்தும். இதற்காக தமிழ் நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் என்ற தனி அமைப்பு உருவாக் கப்படும்’’ என தெரிவித்தார்.
மறைந்த முதல்வர் அறிவிப் பின்படி, தமிழ்நாடு பைபர் நெட் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்குவதற்கான பணிகளுக் காக கடந்தாண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிறுவனத் துக்கு தமிழக அரசின் பங்கு முதலீடாக ரூ.50 லட்சம் ஒதுக் கப்பட்டு, நிறுவனத்தை பதிவு செய் வதற்கான பூர்வாங்க பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திட்டத்தை செயல் படுத்த மத்திய, மாநில அரசுகளுக் கிடையில் கையெழுத்தான புரிந் துணர்வு ஒப்பந்தம் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் பரிமாறப்பட்டது.
தமிழகத்தில் ‘பாரத் நெட்’ திட்டத்தை செயல்படுத்த விரிவாக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சி களும் ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்கப்படுகிறது. ஜெய லலிதாவின் கனவுத் திட்டமான ‘இல்லந்தோறும் இணையம்’ திட்டத்தையும் இக்கட்டமைப்பை பயன்படுத்தி செயல்படுத்த முடி யும்.
நிகழ்ச்சியில், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் எம்.மணி கண்டன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அரசின் தொலை தொடர்புத்துறை கூடுதல் செயலர் என்.சிவசைலம், தமிழக தகவல் தொழில்நுட்ப செயலர் தா.கி.ராமச்சந்திரன், பாரத் பிராண்ட் நெட்ஒர்க் நிறுவன இயக்குனர் பி.கே.மிட்டல், அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.