

‘லத்திகா’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ உட்பட சில படங்களில் நடித்து பிரபலமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கோடிக் கணக்கில் கடன் வாங்கி கொடுக் கும் தொழில் செய்து வருகிறார். ஆந்திர தொழில் அதிபர் ஒருவ ரிடம் ரூ.100 கோடி கடன் வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக இவர் மீது சென்னை காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் கொடுக்கப்பட் டது. இதையடுத்து சீனிவாசனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 2013-ம் ஆண்டில் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார்.
இதனிடையே, டெல்லியை சேர்ந்த புளுகோஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் திலிப் பத்வானி என்பவரிடம் ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி, இதற்காக ரூ.10 கோடி கமிஷன் கேட்டிருக்கிறார் சீனிவாசன். இதற்கு ஒப்புக்கொண்ட திலிப் முன்பணமாக ரூ.5 கோடியை சீனி வாசனிடம் கொடுத்து, மீதமுள்ள தொகையை கடன் வாங்கி கொடுத்த பின்னர் தருவதாக கூறியிருக்கிறார். ஆனால், சீனி வாசன் தன்னை ஏமாற்றிவிட்டதாக திலிப் புகார் கூறியுள்ளார். 2013-ம் ஆண்டில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரிடம் திலிப் புகார் கொடுத்தார். அதன்பேரில் சீனிவாசன் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீனில் வெளிவந்த சீனி வாசன், நீதிமன்றத்தில் ஆஜராகா மல் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி நீதிமன்றம் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து நேற்று காலையில் சென்னை அண்ணா நகரில் வீட் டில் இருந்த சீனிவாசனை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் டெல்லி அழைத்துச் சென்றனர்.