தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு: தலைமை செயலகத்தில் 1000 போலீஸார் குவிப்பு

தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு: தலைமை செயலகத்தில் 1000 போலீஸார் குவிப்பு
Updated on
1 min read

சட்டப்பேரவையில் இன்று பலப் பரீட்சை நடக்க இருப்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத் தப்பட்டுள்ளன. மெரினாவில் மீண்டும் போலீஸார் குவிக்கப்பட் டுள்ளனர்.

சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் முதல்வராக பதவி ஏற்றார்.

இதற்கிடையில், சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் வீடு மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. ஓ.பன் னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவில்பட்டி அதிமுக முன்னாள் வட்ட செயலாளர் பாலாஜி (52), ஆயுதப்படை காவலர் சங்கரநாரா யணன் ஆகியோர் தாக்கப்பட்ட னர். போடியில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் அலுவலகமும் சூறையாடப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் எடப் பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து டிஜிபி டி.கே ராஜேந்திரன், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய் துள்ளார். கூடுதல் டிஜிபி திரிபாதி இதை கண்காணித்து வருகிறார்.

அனைத்து மாவட்ட எஸ்.பி களுக்கும் பாதுகாப்பை உறுதிப் படுத்தும்படி வாய்மொழி உத் தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் பாதுகாப்பு ஏற்பாடு களை கவனித்து வருகிறார். ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. வாகன தணிக்கையும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. மெரினாவில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதர வாளர்கள் திரள வாய்ப்புள்ளதாக உளவு மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸார் எச்சரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மெரினாவில் மீண்டும் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.

தலைமைச் செயலகத்தில் சென்னை காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் பாதுகாப்பு ஏற்பாடு களை செய்துள்ளார். வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் தர், இணை ஆணையர் ஜோஷி நிர்மல் குமார், துணை ஆணையர் செசன் சாய் தலைமையில் ஆயிரம் போலீஸார் நிறுத்தப்பட் டுள்ளனர்.

காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடி மரச்சாலை சந்திப் பிலும் போலீஸார் நிறுத்தப்பட் டுள்ளனர். அதேபோல், தலைமை செயலகத்தின் வெளி நுழைவாயில் மற்றும் பிரதான நுழைவாயிலிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. சட்டப்பேரவை உறுப் பினர்களின் வாகனங்களை நிறுத் துவதற்கும் இடவசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வாக் கெடுப்பு எதிரொலியாக எந்த அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடக்கூடாது என்பதற்காக சென்னையில் உள்ள அனைத்து சாலை சந்திப்புகளிலும் போலீ ஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். கண் காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in