லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை: தீர்வு கிடைக்காவிட்டால் வேலைநிறுத்தம் தொடரும் என அறிவிப்பு

லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை: தீர்வு கிடைக்காவிட்டால் வேலைநிறுத்தம் தொடரும் என அறிவிப்பு
Updated on
1 min read

தென் மாநில லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் 7-ம் தேதி (இன்று) ஹைதராபாத் அல்லது டெல்லி யில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தீர்வு கிடைக்காவிட்டால் நாளை (8-ம் தேதி) நடைபெற இருக்கும் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாங்களும் பங்கேற்போம் என்று மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மாநில லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கடந்த 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். இதனால், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங் களில் கடந்த 8 நாட்களாக சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளது.

இந்நிலையில், லாரி உரிமை யாளர்கள் மாநில அரசுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் மாநில அளவிலான பிரச்சினைகளில் உடன் பாடு ஏற்பட்டது. இருப்பினும், வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை உயர்வைக் குறைக்க மத்திய அரசு மறுத்து வருவதால், 8-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது.

இந்நிலையில், வாகனங்களுக்கு உயர்த்தப்பட்ட காப்பீட்டுத் தொகை யைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் நாளை (8-ம் தேதி) முதல் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத் தலைவர் குமாரசாமி கூறியதாவது:

தென் மாநில லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் 7-ம் தேதி (இன்று) ஹைதராபாத் அல்லது டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், வாகனங்களுக்கான காப்பீட் டுத் தொகையைக் குறைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டால், லாரிகள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து விடும். மேலும், இதே கோரிக் கையை பிரதானமாக வைத்து, நாளை (8-ம் தேதி) நடைபெற உள்ள அகில இந்திய லாரிகள் வேலைநிறுத்தம் கைவிடப்படலாம்.

கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால் அகில இந்திய லாரிகள் வேலைநிறுத்தத்தில் நாங்களும் பங்கேற்போம். தமிழகத்தில் 8 நாட்களாக நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்தால் 4.50 லட்சம் லாரிகள் ஓடவில்லை. இதனால் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in