Published : 25 Feb 2014 05:30 PM
Last Updated : 25 Feb 2014 05:30 PM

நெல்லை: ஆட்டோ விபத்தில் பள்ளி மாணவி பலி; 17 சிறுவர்கள் காயம்

திருநெல்வேலி அருகே ஜே.சி.பி. இயந்திரம் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார். 17 மாணவ, மாணவியர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் காயமடைந்தனர்.

கங்கைகொண்டான் கலைஞர் காலனியில் இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள சிறுவர், சிறுமியர் ஆட்டோக்களில் தாழையூத்திலுள்ள ஜோசப் பள்ளிக்குச் செல்வது வழக்கம்.

அதன்படி, இன்று காலையில் இந்த முகாமிலிருந்து ஆட்டோ ஒன்றில் 18 சிறுவர், சிறுமியர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். ஆட்டோவை கட்டளையைச் சேர்ந்த மணிகண்டன் (42) என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். ஓட்டுநர் இருக்கையில் 5 பேர் அமர்ந்திருந்தனர்.

அந்த ஆட்டோ கங்கைகொண்டான் - தாதனூத்து இடையே பெட்ரோல் நிலையம் எதிரே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஜே.சி.பி. இயந்திரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஆட்டோவில் இருந்த ஓட்டுநர் உள்பட அனைவரும் காயமடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கங்கைகொண்டான் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டையிலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா என்ற 11 வயது மாணவி உயிரிழந்தார். அவர், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த செல்வகுமார் என்பவரது மகள் ஆவார்.

மருத்துவமனையில் சசிகலாவின் தங்கை மலர்விழி (9) உள்பட 17 சிறுவர்கள் சிகிசைப் பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவருமே 11 வயதுக்கு உட்பட்டவர்கள்.

இந்த விபத்து தொடர்பாக கங்கைகொண்டான் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x