

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 5 பேரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்கு கூடியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அ.ராசமாணிக்கம், ர.சொ.சுப்பிரமணியம், இ.எம்.சுப்பிரமணியம், நீ.அன்புச்செழியன், க.முத்துவேல் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் குறிப்பை பேரவைத் தலைவர் பி.தனபால் வாசித்தார்.
பின்னர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
சட்டப் பேரவையில் இன்று..
சட்டப் பேரவையில் இன்று 2016-17-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெறவுள்ளது.