Published : 06 Jun 2016 08:08 AM
Last Updated : 06 Jun 2016 08:08 AM

விளம்பரங்கள் வைப்பதற்காக மரங்களை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பொதுமக்கள் உரிமை விழிப்பு ணர்வு அறக்கட்டளையின் தலை வர் அழகர் செந்தில் நேற்று நிரு பர்களிடம் கூறியதாவது: உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அரசும், சமூக ஆர்வலர்களும் மரங்களை நடுவது மற்றும் அவற்றை பராமரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் சில நிறுவனங்கள் தங்களுடைய வியாபார முன்னேற்றத்துக்காக சாலையோர மரங்களில் ஆணி களை அடித்து, விளம்பரப் பதாகைகளை மாட்டி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் பல்வேறு நிலை அலுவலர்கள் உள்ளனர். அவர்கள் ரோந்து செல்ல 4 சக்கர வாகனங்கள், தொடர்புகொள்ள வாக்கி டாக்கி என அனைத்து வசதிகள் செய்து கொடுத்தும், அவர்கள் கண்ணில் படும் இதுபோன்ற விதிமீறல்கள் மீது யாரேனும் புகார் தெரிவித்தால், குறிப் பிட்ட இடத்தில் மட்டும் விளம்பரங் களை அகற்றிவிட்டு, அவர்களின் நடவடிக்கையை முடித்துக்கொள் கின்றனர். இனி வரும் காலங்களி லாவது, மரங்களில் ஆணி அடிப் பதை தடுப்பதுடன், அவ்வாறு செய்யும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x