இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், வெப்பச் சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஒருசில இடங்களில் பெய்யக்கூடும். பகல் நேரங்களில் அவ்வப்போது பலத்த தரைக்காற்று வீசும்.

1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ஒடிசா மாநில கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதற்கும் தமிழகத்தில் மழை வாய்ப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. இங்குள்ள மீனவர்கள் மற்றும் சரக்கு கப்பல் கள், ஒடிசா கடல் வழியாக செல்லக்கூடாது என்பதை உணர்த்தவே எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in