

ஜெயலலிதா தீபா பேரவை மாநில மாநாடு சேலத்தில் நடத்தப்படும் என பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நாமக்கல்லில், ஜெயலலிதா தீபா பேரவைக் கூட்டம் நடந்தது. இதில், 2-ம் கட்டமாக 9 மாவட் டப் பொறுப்பாளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.ராமச் சந்திரன் தலைமை வகித்துப் பேசிய தாவது:
ஜெயலலிதா தீபா பேரவை பொறுப்பாளர்களுக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. பேரவை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் உறுப்பினர் களை சேர்க்க வேண்டும். உண்மையான தொண்டர்கள், மக்கள் தீபா பக்கம்தான் உள்ளனர்.
வரும் பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தீபாவிடம் உறுப்பினர்கள் சேர்க்கை விவரம் அளிக்கப்படும். அதைய டுத்து அவரது அறிவுறுத்தல்படி சேலம் போஸ் மைதானத்தில் மாநில மாநாடு நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதுவரை 28 மாவட்டப் பொறுப் பாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர் என்றார்.
முன்னதாக கட்சித் தலைமை பொறுப்பை தீபா ஏற்க வேண்டும் என்பது உட்பட 7 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அரியலூர் மாவட் டப் பொறுப்பாளராக எம்.செந் தில்குமார், ஆர்.தியாகராஜன் (கரூர்), ஹேமச்சந்திரன் (வட சென்னை), பிரகாஷ் (சென்னை), எம்.கார்த்திக் (தென் சென்னை), பி.பிரபாகரன் (தஞ்சாவூர்), பச்சி யப்பன் (தருமபுரி), எஸ்.தெய் வேந்திரன் (விருதுநகர்), எம்.ஜெய மூர்த்தி (விழுப்புரம்) ஆகியோர் அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர் களாக நியமிக்கப்பட்டனர்.