உடல்நலக் குறைவு, சாலை விபத்துகளில் உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

உடல்நலக் குறைவு, சாலை விபத்துகளில் உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
Updated on
1 min read

பல்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளிலும், உடல் நலக் குறைவாலும் உயிரிழந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கடலூர் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்துப் பிரிவு காவல்நிலைய தலைமைக் காவலர் துரை, துறைமுகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜி.மோகன்தாஸ், நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் போக்குவரத்துப் பிரிவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் எஸ்.முருகன், வேலூர் மாவட்ட ஆயுதப்படை வாகனப்பிரிவு இரண்டாம் நிலைக் காவலர் என்.நவீன், மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி காவல்நிலைய முதல்நிலைக் காவலர் இளையராஜூ ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சீ.குப்புசாமி, சென்னைப் பெருநகர காவல், ஓட்டேரி காவல்நிலைய தலைமைக் காவலர் டி.பிரபாகரன், வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளி உதவி ஆய்வாளர் செல்லம்மாள், ஈரோடு மாவட்டம், சித்தோடு காவல்நிலைய தலைமைக் காவலர் எஸ்.கதிர்வேல், சென்னைப் பெருநகர காவல், அண்ணாசாலை காவல்நிலைய தலைமைக் காவலர் வி.நாகராஜன் ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 11-ம் அணி உதவி ஆய்வாளர் ஆர்.இளங்கோ, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 4-ம் அணி இரண்டாம் நிலைக் காவலர் எம்.ரஞ்சித்குமார், தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல்நிலைய தலைமைக் காவலர் என்.சுப்பையா, நெல்லை மாவட்டம், கூடங்குளம் காவல்நிலைய முதல்நிலைக் காவலர் முருகன் ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 14 காவலர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in