Last Updated : 18 Jun, 2016 08:26 AM

 

Published : 18 Jun 2016 08:26 AM
Last Updated : 18 Jun 2016 08:26 AM

நகராட்சிப் பள்ளி எலைட் வகுப்புத் திட்டம் மூலம் மருத்துவ படிப்புக்குத் தேர்வான மாணவர்கள்: கொடையாளர்களிடம் நிதி உதவி எதிர்பார்ப்பு

ராமநாதபுரம் நகராட்சி பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் எலைட் வகுப்பு திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு எலைட் வகுப்பில் 45 மாணவ, மாணவிகள் படித்ததில் 9 பேர் மருத்துவப் படிப்புக்கு தேர் வாகி சாதனை படைத்துள்ளனர்.

மருத்துவப் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் நேற்று வெளி யிடப்பட்டது. இதில் ராமநாதபுரம் அரசுப் பள்ளியில் படித்த மாண வர் ஆர்.மனோஜ்குமார் கட் ஆஃப் மதிப்பெண் 199.75 பெற்று மாநில தர வரிசை பட்டியலில் 18-ம் இடத்தில் உள்ளார். டி.இலக்கிய எழிலரசி கட் ஆப் 198.5, எஸ்.ஜே. சூரியபிரகாஷ் 198, செல்வபாண்டி 197.5, எஸ்.நஸ்ரின் 197, டி.கார்த்திக் 196.75, பி.கோகிலா 195.75, எம்.சுர்ஜித் 195.75, எம்.மகேஷ்குமார் 195.5 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து எலைட் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: அரசுப் பள்ளியில் படித்து மருத்துவப் படிப்புக்கு தேர்வான இவர்கள் ஏழ்மையான குடும்பத் தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மருத்துவப் படிப்பு படிக்க போதிய வசதி இல்லை. இவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கும் கொடையாளர்களைத் தேடி வரு கிறோம் என்றார்.

மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்க, நிதி உதவி வழங்க முன்வருபவர்கள் ஒருங்கி ணைப்பாளர் நவநீத கிருஷ் ணனை 9487889524 என்ற எண் ணில் தொடர்பு கொள்ளலாம்.

3 மாவட்டங்களில் எலைட் வகுப்புகள்

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களை மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற் படிப்புகளில் சேர்ந்து படிக்க வைக்கும் நோக்கில் எலைட் வகுப்பு திட்டம் ராமநாதபுரம், கன்னியாகுமரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 400-க்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தனியாக விடுதி வசதியுடன் அரசுப் பள்ளியில் (ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன்) படிக்க வைக்கும் திட்டமே எலைட். கன்னியாகுமரி மாவட்ட ஆட்சி யராக இருந்த நாகராஜன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த க.நந்தகுமார், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த தாரேஸ் அகமது ஆகியோரால் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x