

சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் 4, 5, 6, 8, 9, 10, 13 ஆகிய மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் வாக்குச் சாவடி மையங்களிலும் வைக்கப்பட உள்ளன. மற்ற மண்டலங்களில் உள்ளவர்கள் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வைக்கப்படும் வாக்காளர் வரைவு பட்டியலை சரிபார்த்துக் கொள்ளலாம்.
2015-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அக்டோபர் 15-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெறும் முகாம்களில் கலந்துகொண்டு தங்கள் பெயரைச் சேர்த்துக் கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமைகளான அக்டோபர் 19 மற்றும் நவம்பர் 2-ம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.