

கங்கை நதிக்கரையில் திருவள் ளுவர் சிலை அமைக்கப்படுவதை முன்னிட்டு, கன்னியாகுமரியில் இருந்து ஹரித்துவாருக்கு திருவள்ளுவர் திருப்பயண யாத்திரை தொடங்கியது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தருண் விஜய் எம்பி ஆகியோர் இப்பயணத்தைத் தொடங்கிவைத்தனர்.
தமிழ் மொழியை நாடெங்கும் பரப்பும் வகையில் தருண் விஜய் எம்பி முயற்சி மேற்கொண்டுள்ளார். இதன் ஒருபகுதியாக கங்கை நதிக்கரையில் 12 அடி உயரத் தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படுகிறது. வரும் 29-ம் தேதி ஹரித்துவாரில் திருவள் ளுவர் சிலை திறப்பு விழா நடக் கிறது.
இதை முன்னிட்டு கன்னியா குமரியில் இருந்து ஹரித்துவாருக்கு திருவள்ளுவர் திருப்பயண யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி யாத்திரை தொடக்க நிகழ்ச்சி நேற்று கன்னியாகுமரியில் நடந்தது. கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் பாதத்தில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தருண் விஜய் எம்பி ஆகியோர் மலர்தூவி மரியாதை செய்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், துணைத் தலைவர் எம்.ஆர்.காந்தி, மாவட்டத் தலைவர் குமாரதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இருந்து, திருவள்ளுவர் திருப்பயண வாகன யாத்திரையை பொன்.ராதாகிருஷ் ணன் தொடங்கிவைத்தார்.
இதில், கங்கை நதிக்கரையில் அமைக்கப் பட உள்ள திருவள் ளுவர் சிலையின் மாதிரி கொண்டு செல்லப்படுகிறது.