

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக தமிழகத்தில் மழை அதிகரித்துள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் புதன்கிழமையன்று மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி தெரிவித்தார். கடலோர மாவட்டங்களை விட உள் மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி தெரிவித்தார். இது தென் மேற்கு பருவ மழை முடிந்து வட கிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறி என்றும் கூறினார். வட கிழக்கு பருவ மழை தொடங்கும்போது கடலோர மாவட்டங்களில் இன்னும் அதிக அளவில் மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.