Published : 03 Jul 2016 10:51 AM
Last Updated : 03 Jul 2016 10:51 AM

ஒவ்வொரு சலுகையாக ரத்து: மக்கள் சேவையை புறந்தள்ளுகிறதா ரயில்வே துறை?

வருவாய் இழப்பை சரிக்கட்டு கிறோம் என்ற பெயரில் மக்களுக்கு அளித்து வந்த பல்வேறு சேவை கள் மற்றும் சலுகைகளைப் புறந் தள்ளிவிட்டு ரயில்வே துறை லாப நோக்கத்தை கையில் எடுக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என் கின்றனர் ரயில் பயணிகள்.

மத்திய அரசின் கீழ் செயல்படும் ரயில்வே துறை ஆண்டுதோறும் தனது வரவு செலவுகள், திட்டங்கள் ஆகியவற்றுக்கு தனியாக பட் ஜெட்டை தாக்கல் செய்கிறது.

கடந்த காலங்களில் ஒவ்வொரு ரயில்வே பட்ஜெட்டிலும், ஒவ் வொரு மாநிலத்துக்கும் குறைந்த பட்சம் ஒரு புதிய ரயில், ஒரு புதிய ரயில் பாதை, ரயில்கள் நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இடம்பெற்று இருக்கும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக வெளியிடப் பட்ட ரயில்வே பட்ஜெட்களில் புதிய ரயில்களின் அறிவிப்பு சொற்ப அளவிலேயே இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், குறைந்தபட்ச பயணக் கட்டணம், நடைமேடை கட்டணம் உள்ளிட்டவை உயர்த்தப் பட்டன. தத்கால் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டில் தவிர்க்க முடியாத காரணத்தால் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், பயணச் சீட்டுக்கான கட்டணத் தொகையை திரும்பப் பெறும் வசதியும் ரத்து செய்யப் பட்டது.

அதேபோன்று தீபாவளி, பொங் கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங் கள், கோடை விடுமுறை நாட்களில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதற்கு வழக்கமான கட்டணம்தான் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு சுவிதா சிறப்பு ரயில் என பெய ரிட்டு, மும்மடங்கு கட்டணம் வசூலிக் கப்படுகிறது. இவை அனைத்துமே ரயில்வே துறையின் மக்கள் சேவையை புறந்தள்ளிவிட்டு, லாப நோக்கத்தை முன்னெடுக்கும் முயற்சிதான் என்கின்றனர் ரயில் பயணிகள்.

இதுகுறித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் வி.சத்தியநாராயணா, ‘தி இந்து’விடம் கூறியது:

பாஜக அரசு புதிய ரயில்களை விடவில்லை. தங்களது ஆட்சியின் தரத்தை, தகுதியை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் 500 கி.மீ. தொலைவுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் அதிவிரைவு ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு திட்டத்துக்கு செலவிடும் தொகையைக் கொண்டு நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஏராளமான புதிய ரயில்களை விட முடியும்.

மக்கள் சேவையை மட்டுமே பிரதானமாகக் கொண்ட நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமான ரயில்வே துறை தற்போது நஷ்டம் எனக் கூறி மக்க ளுக்கு அளித்து வந்த பல்வேறு சேவைகளை ரத்து செய்து வரு வது பொதுமக்களுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடுத்தர மக்கள் பாதிப்பு

முன்பதிவில் குழந்தைகளுக் கான சலுகைக் கட்டணம் ரத்து, பயணக் கட்டணங்கள் உயர்வு ஆகி யவை நடுத்தர மக்களை பெரிதும் பாதித்து உள்ளன. புதிய ரயில்கள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இதில் தற்போது, வீடுகளுக்கான சமையல் காஸ் மானியத்தைத் தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுப்பதுபோல, தற்போது மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் 40 சதவீத கட்டணச் சலுகை மற்றும் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் 50 சதவீத கட்டணச் சலுகைகளை தாமாக முன்வந்து விட்டுத் தரலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மக்களுக்கான சலுகைகள், சேவைகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, ரயில்வே துறையை ஒட்டுமொத்தமாக தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்துக்கு முன்னேற்பாடாகக்கூட இவை இருக்கலாமோ என சந்தேகிக்கத் தோன்றுகின்றது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x