

சிந்தாதிரிப்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் மோதலில் பேருந் தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
சென்னை விவேகானந்தர் இல்லத்தில் இருந்து திரு.வி.க நகருக்கு நேற்று மாலையில் மாநகரப் பேருந்து ஒன்று சென்றது. பேருந்தில் 2 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருந்தனர்.
சிந்தாதிரிப்பேட்டை சிம்சன் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது கல்லூரி மாணவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.
அப்போது சில மாணவர்கள் சாலையில் கிடந்த கற்களை எடுத்து பேருந்தின் மீது வீசி தாக்கினர். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. மாணவர்கள் தாக்கியதில் சில பயணிகளும் காயம் அடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு போலீஸார் வருவதற்குள் மாணவர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீ ஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.