நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியான விவகாரத்தில் நீதிபதி அதிர்ச்சி

நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியான விவகாரத்தில் நீதிபதி அதிர்ச்சி
Updated on
1 min read

நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியான விவகாரத் தில் இரு தரப்பின் செயல்பாடுகள் தனக்கு அதிர்ச்சி அளித்ததாக நீதிபதி தெரிவித்தார்.

மேலூர் அருகே மலம்பட் டியைச் சேர்ந்த கதிரேசனும், அவரது மனைவி மீனாட்சியும் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கோரி, மேலூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் ஆஜரானார். அப்போது கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளதா என்பது தொடர்பாக அரசு மருத்துவர்கள் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த மார்ச் 20-ம் தேதி நீதிபதியின் தனி அறையில் விசாரிக்கப்பட்டது.

இந்த விசாரணையை அடுத்து தனுஷின் மருத்துவ அறிக்கை வெளியானது. அதில் கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்த அங்க அடை யாளங்கள் தனுஷின் உடலில் இல்லை எனக் குறிப்பிடப்பட்டி ருந்தது. மேலும், அந்த அறிக்கை யில் நீதிபதியின் கேள்விகளுக்கு மருத்துவர்கள் அளித்த பதிலில், சிறிய அளவிலான மச்சம் ஒன்று லேசர் சிகிச்சையில் அகற்றப்பட்டி ருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கருத்தை வைத்து தனுஷின் உடலில் அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சையில் அகற்றப்பட் டிருப்பதாக கதிரேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தனுஷ் தரப்பு மறுத்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ் விசாரணையை ஒத்தி வைக்க கோரினார். தனுஷின் வழக்கறிஞர் தான் வாதாட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நீதிமன்ற உத்தரவுகள் வெளிப் படையானவை. ரகசியமானவை அல்ல. நீதிமன்ற உத்தரவின் நகல் கேட்டு பதிவுத்துறையிடம் மனு அளித்தால் தரப்போகிறார்கள். அதன்பிறகு, அந்த நகலை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

ஆனால், கடந்த வாரம் இந்த வழக்கு குறித்து கருத்துகள் வெளியே தெரிவிக்கப் பட்டுள்ளது. என் உத்தரவு இல் லாமலேயே நான் குறிப்பிட்டுச் சொன்னதாக இரு தரப்பினராலும் பேசப்பட்டது. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி தனி அறையில் விசாரணை நடத் தப்பட்டது. இவ்வாறு விசாரிப்பது நீதிபதியின் தனிப்பட்ட அதிகாரம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர், கதிரேசன் தரப்பு வழக்கறிஞரின் வேண்டுகோளை ஏற்று விசாரணையை ஏப்.11-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in