தொலைநோக்குத் திட்டம் - 2023 உறுதியாக செயல்படுத்தப்படும்: ஓ.பன்னீர்செல்வம் தகவல்

தொலைநோக்குத் திட்டம் - 2023 உறுதியாக செயல்படுத்தப்படும்: ஓ.பன்னீர்செல்வம் தகவல்
Updated on
2 min read

தொலைநோக்குத் திட்டம் 2023-ன் கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 217 திட்டங்களும் உறுதியாக செயல்படுத்தப்படும் என்று நிதி யமைச்சர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் மதுரை மத்திய தொகுதி திமுக உறுப்பினர் பழனிவேல் தியா கராஜன், தனது கன்னிப்பேச்சை ஆங்கிலத்தில் பேசினார். அப் போது, தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டம்-2023 தொடர்பாக சில கருத்துகளை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நடந்த விவாதம்:

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:

தொலைநோக்குத் திட்டம் 2023-ன் கீழ் ரூ.15 லட்சம் கோடியில், 217 திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 86 திட்டங்கள் தொடங்கப் பட்டுள்ளன. 17 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 26 திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 89 திட்டங்கள் தயார் நிலையில் உள்ளன. இத்திட்டங்கள் அமலுக்கு வரும்போது சராசரி தனிநபர் வருமானம் 10 ஆயிரம் அமெரிக்க டாலரை எட்டும். உறுதியாக இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

அப்போது, அதிமுக உறுப்பினர் பாண்டியராஜன் (ஆவடி) பேச வாய்ப்பு கேட்டார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பேரவைத் தலைவர் பி.தனபால்:

தியாகராஜன் பேச்சு குறித்து, பாண்டியராஜன் விளக்கம்தான் கேட்கிறார்.

தொடர்ந்து பாண்டியராஜன் பேசினார். அப்போது திமுகவினர் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

பழனிவேல் தியாகராஜன்:

நான் சொன்னதை விட்டுவிட்டு, வேறு எதையோ கேட்கிறார்? கடந்த 3 ஆண்டுகளாக வரி வருவாய் குறைந்துள்ளது. இலக்கு நிர்ணயித்தபோதும் அதை உங்களால் எட்ட முடியவில்லை. இதனால் அரசுக்கு கடன் அதிகரித்து, தனிநபர் மீதான கடனும் அதிகரிக்கிறதே?

அப்போது மீண்டும் பாண்டிய ராஜன் எழுந்து பேச முயன்றார். அதற்கும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பேரவைத் தலைவர்:

தியாகரா ஜன் பேசியதில் பாண்டியராஜன் விளக்கம் கேட்கிறார். அவரும் பதில் சொல்லத் தயாராக உள்ளார். ஆனால், நீங்கள் ஏன் தடுக்கீறீர் கள்?

துரைமுருகன் (திமுக):

பொது வாக புதிய உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கிடக் கூடாது என்பது மரபு. புதிய உறுப்பினரின் கன்னிப்பேச்சின்போது குறுக்கிடு வது நியாயம்தானா?

பேரவைத் தலைவர்:

விவாதம் நன்றாக ஆரோக்கியமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.

கே.பாண்டியராஜன் (அதிமுக):

நிதிப் பற்றாக்குறைக்கான காரணம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த வருவாய் தொடர்ந்து அதிகரித்துதான் வரு கிறது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ் டாலின்:

எங்கள் கேள்விக்கு நிதியமைச்சர் பதிலுரை அளிக்க உள்ளார். ஆனால், பாண்டியரா ஜன் தற்போது பதில் அளிக்கி றாரே?

பழனிவேல் தியாகராஜன்:

நான் கேட்பது வேறு; அவர் கூறும் பதில் வேறாக உள்ளது.

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:

தமிழகத்தின் வரி வருவாய் ஆண்டு தோறும் உயர்ந்து கொண்டேதான் வருகிறது. கடந்த 2014-15ல் ரூ.78,656 கோடியாக இருந்த வரி வரு வாய், 2015-16ல் ரூ.86,537 கோடி யாக உயர்ந்தது. உலக, இந்திய பொருளாதார மந்தநிலை தமிழகத் தையும் தொடர்ந்து பாதித்ததால், கடந்த 3 ஆண்டுகளாக இலக்கை எட்ட முடியவில்லை. நிதிப் பற்றாக்கு றையை ஈடுகட்ட கடன் பெறப்ப டுகிறது. இக்கடன் தொகை உரிய திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது. சரி யான நேரத்தில் திருப்பிச் செலுத் தப்படுகிறது. நிலுவையில் உள்ள கடன் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 25 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். தமிழகத்தில் 18.43 சதவீதமாகவே உள்ளது. எனவே மாநிலத்தின் கடன் கட்டுக்குள்தான் உள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in