

செவிலியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படைத்தன்மையுடன் நடத்திட அரசு முன்வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவலியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் வெளிப்படைத் தன்மைகள் இல்லை என்றும், முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன எனவும் ஏராளமான புகார்கள் எழுந்துள்ளளன.
அரசு இதனை கவனத்தில் கொண்டு, இந்த இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படைத்தன்மையுடன் நடத்திட முன்வர வேண்டும். அதற்கான உரிய நடவடிக்கைகளை உயர் முன்னுரிமை அளித்து தமிழக அரசு எடுத்திட வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.