

பொறியியல் படிப்புக்கு இதுவரை 19,117 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜுன் 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 7-வது நாளான நேற்றைய கலந்தாய்வுக்கு 4,853 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வுக்கு வந்த 3,548 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. 1,294 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. கடந்த ஒரு வாரத்தில் 19,117 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை ஜெ.இந்துமதி தெரிவித்தார்.