

ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் தொடர்ந்த அவதூறு வழக்கு களில் ஆகஸ்ட் 4-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டது.
சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆளுநர் ரோசய்யா தொடர்ந்த அவதூறு வழக்கில், ‘‘தனியார் தொலைக் காட்சிக்கு கடந்த ஏப்ரல் 30-ம் தேதி தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அளித்த ஒரு பேட்டியில், பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு ரூ.15 கோடியை ஆளுநர் வாங்கி அதில் ரூ.10 கோடியை முதல்வர் ஜெயலலிதாவிடம் கொடுத்துவிட்டு, மீதி ரூ.5 கோடியை வைத்துக்கொள்வதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை உள்நோக்கத்துடன் சுமத்தியுள் ளார். எனவே, அவர் மீது குற்ற வியல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இதே பேட்டிக்காக முதல்வர் ஜெயலலிதாவும் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடர்ந் திருந்தார். இந்த 2 வழக்குகளையும் விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த 2 வழக்குகளின் விசாரணைக்காக ஆகஸ்ட் 4-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு இளங்கோ வனுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.