பிரெஞ்சு, ஜெர்மன் உட்பட 5 மொழிகளில் பதினெண்கீழ்கணக்கு நூல்கள் மொழிபெயர்ப்பு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

பிரெஞ்சு, ஜெர்மன் உட்பட 5 மொழிகளில் பதினெண்கீழ்கணக்கு நூல்கள் மொழிபெயர்ப்பு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
Updated on
1 min read

பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் மலை யாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமிழ்தினும் இனிய அருந் தமிழ் மொழி, காலத்தின் மாறுதல் களை எல்லாம் எதிர்கொண்டு எதிர்ப்புகளையும் அறைகூவல் களையும் சந்தித்து, உலக மொழி களில் இன்னும் சிறந்த மொழியாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது. ‘தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கு அமரர் சிறப்பு கண்டார்’ என்ற பாரதியாரின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், தமிழுக்காக பாடுபடும் அறிஞர்கள், சான்றோருக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள், உதவிகள், சிறப்புகள் அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் தமி ழுக்கு பாடுபடும் சான்றோர், அறிஞர் களுக்கு சிறப்பு செய்யும் வகை யில் 55 விருதுகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. தமிழ் மொழியின் பெருமையை பிற நாட்டவரும் அறியும் வண்ணம், உலகப் பொதுமறையாம் திருக்குறள், சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் நிலையில் உள்ளது.

இதேபோல பாரதியார், பாரதி தாசன் பாடல்களும் சீனம் மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்க் கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அதிமுக தேர்தல் அறிக்கையில், ‘பண்டைத்தமிழ் நூல்கள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும்’ என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதை செயல் படுத்தும் வகையில், பதினெண்கீழ் கணக்கு நூல்களில் தெரிவு செய் யப்பட்ட நூல்கள், உலக மொழி களான பிரெஞ்சு, ஜெர்மன் மொழி களிலும், இந்திய மொழிகளான மலையாளம், இந்தி, தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்படும். இப் பணிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் தமிழ் மெழியின் வளம் பற்றி உலக மக்கள் அறிய மேலும் வழிவகை ஏற்படும்.

இவ்வாறு அறிக்கையில் முதல் வர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in