Published : 24 Jan 2017 08:20 AM
Last Updated : 24 Jan 2017 08:20 AM

வறட்சி பாதிப்பு: காவிரி டெல்டா மாவட்டங்களில் மத்தியக் குழு இன்று ஆய்வு செய்கிறது

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்புகள் தொடர்பாக மத்தியக் குழு இன்று ஆய்வு செய்கிறது.

இது தொடர்பாக அரசு வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் நிலவும் வறட்சியை பார்வையிட, வேளாண் துறை அமைச்சகத்தின் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் வசுதா மிஸ்ரா தலைமையிலான மத்திய குழு சென்னை வந்தது. அக்குழு நேற்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தது.

அப்போது மத்திய குழுவினரி டம் பேசிய முதல்வர், கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவமழை பொய்த்தது. முறையாக கிடைக்க வேண்டிய காவிரி நீரையும் கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. தமிழகத்தில் உள்ள முக்கிய 15 அணைகளில் டிசம்பர் மாத நிலவரப்படி 13 சதவீத நீர் இருப்பு தான் உள்ளது. இதனால் தமிழகத் தில் கடும் வறட்சி நிலவுகிறது. வரும் மாதங்களில் நிலைமை மேலும் மோசமாகும்.

எனவே, மத்திய குழுவானது, தமிழகத்தின் வறட்சி நிலையை மிக ஆழமாக மதிப்பீடு செய்து, விரைவாக மத்திய வேளாண் அமைச்சகத்தில் சமர்ப்பிக்க வேண் டும் என்று கேட்டுக்கொண்டார்.

மத்திய குழுவின் தலைவர் வசுதா மிஸ்ரா பேசும்போது, மத்திய குழு 4 குழுக்களாக பிரிந்து, தமி ழகம் முழுவதும் ஆய்வு செய்து 25-ம் தேதி சென்னை திரும்புகிறது. பின்னர் விரிவான அறிக்கையை விரைவாக மத்திய வேளாண் அமைச்சகத்திடம் சமர்ப்பிப்போம் என்று உறுதியளித்தார்.

சந்திப்பின்போது, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிச் சாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலு மணி, ஆர்.துரைக்கண்ணு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டெல்டாவில் ஆய்வு

மத்தியக் குழு, இன்று (செவ் வாய்க்கிழமை) காவிரி டெல்டா பகுதிகளான நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட் டங்களில் வறட்சி பாதிப்புகளை பார்வையிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x