Published : 21 Jan 2014 10:14 AM
Last Updated : 21 Jan 2014 10:14 AM

ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா: அப்துல் கலாம் பங்கேற்பு

ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 25.01.2014 முதல் 02.02.2014 வரை நடைபெற உள்ளது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய புத்தக நிறுவனமும் இணைந்து நடத்தவுள்ளது.

இத்திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அனைத்து வகையான புத்தகங்கள் இடம்பெறவுள்ளன.

இப்புத்தக திருவிழா வேலை நாட்களில் பிற்பகல் 2.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையும் நடைபெறும். விடுமுறை நாட்களில் காலை 11.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையும் நடைபெறும்.

இத்திருவிழாவில் சிறப்பு பட்டிமன்றங்கள், வேலைவாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வை எதிர்கொள்வது தொடர்பான விளக்கங்கள், சிறந்த பேச்சாளர்களின் கலந்துரையாடல்கள், மாணவ-மாணவியர்கள் மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

மேலும் இப்புத்தகத் திருவிழாவில் நமது பாரம்பரிய உணவுப் பழக்கத்தை பரைசாற்றும் வகையில் உணவுத் திருவிழா நடைபெறும். இதில் பல்வேறு வகையான பாரம்பரிய உணவுகளை கொண்ட அரங்குகள் பொதுமக்கள் பார்வைக்கு அமைக்கப்பட்டு வருகின்றது.

25.01.2014 அன்று கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் எஸ். சுந்தரராஜ் புத்தகத் திருவிழாவை துவங்கி வைக்கின்றார். ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரித்திஷ், சட்டமன்ற உறுப்பனிர்கள் ஜவாஹிருல்லா, சுப. தங்கவேலன், முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

அப்துல் கலாம் பங்கேற்பு:

புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில் மாலை 6 மணியளவில் சிறப்புரைகள் நடைபெற உள்ளன. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடான், ஜோ.டி. குருஸ், சு. வெங்கடேசன், நா. முத்துக்குமார், மதுக்கூர் ராமலிங்கம், பேரா. கு. ஞானசம்பந்தன், தவத்திரு.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி. சிவம், ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ண குமார் உள்ளிட்ட பலர் உரையாற்ற உள்ளார்கள்.

இப்புத்தகத் திருவிழாவிற்கு அனுமதி இலவசம். மாணவ - மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x