ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கு நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

ஜெயலலிதா, சசிகலா மீதான வருமான வரித்துறையினரின் வழக்கை நவம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ஜெயலலிதா, சசிகலா ஆகி யோர் பங்குதாரர்களாக இருந்த சசி என்டர்பிரைசஸ் நிறுவனத் தின் வருமான வரி கணக்குகளை 1991-92 மற்றும் 1992-93 ஆண்டு களில் தாக்கல் செய்யவில்லை. 1993-94ம் ஆண்டுக்கான ஜெய லலிதா மற்றும் சசிகலாவின் தனிப்பட்ட வருமான கணக்கை யும் தாக்கல் செய்யவில்லை' என்று ஜெயலலிதா, சசிகலா மீது வருமானவரி துறையினர் 1996-ம் ஆண்டு எழும்பூர் பொரு ளாதார குற்றப்பிரிவு நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. ஜெயலலிதா சார்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள், ‘வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாததற்கான அபராத தொகையை செலுத்த தயாராக இருப்பதாக வருமான வரித்துறையிடம் ஒரு மனுவை கொடுத்திருக்கோம். இந்த மனு மீது வருமான வரித்துறை இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. அதுவரை இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்' என்று வாதாடினர். ‘ஜெயலலிதா கொடுத்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று வருமான வரித்துறை வழக்கறிஞரிடம் நீதிபதி கேட்டார். ‘மனு மீது நடவடிக்கை எடுக்க 180 நாட்கள் கால அவகாசம் உள்ளது. அதனால் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும்' என வருமான வரித்துறை வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து விசா ரணையை நவம்பர் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி தட்ஷிணா மூர்த்தி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in