

அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வீர வணக்க நாள் பொதுக் கூட்டங்கள் நாளை (புதன்கிழமை) நடைபெற இருப்பதாக அதிமுக பொதுச்செயலர் சசிகலா அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம், உலகம் காணாத மாபெரும் புரட்சியாகும். அதில் உயிரிழந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவது நமது கடமையாகும். தமிழுக்காக உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை, கட்சியின் மாணவர் அணி சார்பில், கட்சியின் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளுடன் இணைந்து, அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் “வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள்” நடைபெற உள்ளன. அதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பங்கேற்பார்கள்.