Published : 01 Feb 2017 09:47 AM
Last Updated : 01 Feb 2017 09:47 AM

கடல் நீரில் கலந்த எண்ணெய் ஓரிரு நாளில் அகற்றப்படும்: அமைச்சர் டி.ஜெயக்குமார் உறுதி

எண்ணூர் காமராஜர் துறைமுகத் தில் இரு கப்பல்கள் மோதிக் கொண்டதால் கடல் நீரில் கலந்த எண்ணெய் ஓரிரு நாளில் அகற்றப் படும் என மீன்வளத் துறை அமைச் சர் டி.ஜெயக்குமார் தெரிவித் துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்) ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது:

எண்ணூர் காமராஜர் துறை முகத்தில் இரு கப்பல்கள் மோதிய தால் ஏற்பட்ட விபத்தில் கச்சா எண் ணெய் கசிந்து கடல் நீரோடு கலந்தது. இதனால் கடல் நீரில் ஆக்சிஜன் குறைந்து மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக் கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் எண்ணூர் துறைமுக பொறுப்புக் கழக தலைவரிடம் தொடர்புகொண்டு விவரங்களை கேட்டறிந்தோம். இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக துறைமுக அதிகாரிகள், சென்னை மாவட்ட ஆட்சியர், மீன்வளத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடல் நீரோடு கலந்த கச்சா எண்ணெய்யை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் இப்பணிகள் முடிந்து நிலைமை சீராகும். விபத்துக்குள் ளான கப்பல்களுக்கு காப்பீடு செய் யப்பட்டிருப்பதால் மீனவர்களுக்கு நஷ்டஈடு பெற முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. எண்ணெய் கசிவால் வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக் குமார் கூறினார்.

முன்னதாக இப்பிரச்சினை குறித்து முழுமையாக பேச திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமியை அனு மதிக்கக் கோரி அக்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர். இதனால் பேரவையின் அலுவல்கள் 10 நிமிடம் பாதிக்கப்பட்டது. கே.பி.பி. சாமிக்கு பேரவைத் தலைவர் அனுமதி மறுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x