

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எண்ணெய் நிறுவன அலுவலர்கள் ஊருக்குள் வர கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றியுள்ளனர்.
நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத் திட்டத்தை செயல்படுத்தினால் அப்பகுதியில் நீர் மற்றும் நிலவளம் பாதிக்கப்படும் என விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இத்திட்டத்தை தடுப்பதற்காக அந்தக் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பு உரு வாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு இயக்கங்கள் உருவாக் கப்பட்டு, அந்த அமைப்புகள் மூலம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
நெடுவாசலில் எரிபொருள் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட இடத்தில் எண்ணெய் கசி கிறதா என்பதை ஆய்வு மேற்கொள்ள அண்மையில் வந்த ஓஎன்ஜிசி அலுவலர்களை கிராம மக்கள் தடுத்தனர். இதேபோல, ஆய்வுக்கு சென்ற வருவாய்த் துறை அலுவலர்களையும் தடுத்து நிறுத்தினர்.
எரிவாயு எடுப்பது தொடர்பாக ஓஎன்ஜிசி உள்ளிட்ட எந்த எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த அலுவலர்களும் ஊருக்குள் வரக்கூடாது என நெடுவாசலின் எல்லையிலும், வயல்வெளிகளிலும் கருப்புக் கொடிகளை கட்டி கிராம மக்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், கிராம நிர்வாக அலுவலகம் அருகே கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, மாவட்ட நுகர் வோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் க.வேழவேந்தன், மத்திய வேளாண் துறை அமைச் சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், “விளைநிலங் களை கையகப்படுத்தி அதில் எரிவாயு திட்டத்தை செயல்டுத் தினால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும். மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இத்திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்” என தெரிவித் துள்ளார்.