Published : 12 Jul 2016 08:11 AM
Last Updated : 12 Jul 2016 08:11 AM

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தல் வழக்கு: நீதிமன்றத்தில் மாயமான கோப்புகளை கண்டுபிடிக்க பதிவுத்துறைக்கு ஆணை - ஆயுள் தண்டனை 5 ஆண்டு கடுங்காவலாக குறைப்பு

புதுச்சேரியில் கடந்த 2002-ம் ஆண்டு பள்ளிக்குச் சென்ற 9 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்திச் சென்று ரூ. 2 லட்சம் கேட்டு மிரட்டியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கிராண்ட் பஜார் போலீஸார் சிறுமியை கடத்தியதாக விஸ்வநாதன், செல் வம், பகவதி ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.நாகமுத்து மற்றும் எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தர வில், ‘‘இந்த சம்பவம் 2002-ல் நடந்துள்ளது. அதன் பிறகு 2003-ல் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இருந்து வழக்கு விசாரணை கூடுதல் உதவி நீதிமன்றத்திற்கும், அங்கிருந்து விரைவு நீதிமன்றமான 2 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் கடந்த 2015-ல் 3 பேருக்கும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள் ளது. இந்த வழக்கைப் பொருத்த மட்டில் 2005-ம் ஆண்டே குற்றப்பத் திரிக்கை தாக்கல் செய்தும், ஒரு வழக்கை விசாரித்து முடிக்க 11 ஆண்டுகள் தேவைப்பட்டதா? என்பது குறித்து தீர்ப்பளித்த கீழ் நீதிமன்ற நீதிபதியிடம் வினா எழுப்பப்பட்டது. அதற்கு அந்த நீதிபதி, ‘‘இந்த வழக்கு தனது நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட போது, வழக்கு தொடர்பான கோப்புகளை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதுவரை அந்த கோப்புகள் கிடைக்கவில்லை என்றும் அதனால் அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது’’ என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப் பட்ட ஆயுள் தண்டனையை 5 ஆண்டு கடுங்காவல் தண்ட னையாக குறைக்கிறோம். அதே நேரம் இந்த வழக்கு தொடர்பான கோப்புகள் கீழ் நீதிமன்றத்தில் மாயமானது குறித்து உயர் நீதிமன்ற பதிவுத்துறை விரிவான விசாரணை நடத்தி, அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x