மணல் தட்டுப்பாடு, விலை உயர்வுக்கு தீர்வு காணாவிட்டால் 78 சங்கங்களுடன் இணைந்து போராட்டம்: சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் அறிவிப்பு

மணல் தட்டுப்பாடு, விலை உயர்வுக்கு தீர்வு காணாவிட்டால் 78 சங்கங்களுடன் இணைந்து போராட்டம்: சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் அறிவிப்பு
Updated on
1 min read

மணல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து பொறியாளர்கள் சங்கங்களுடன் இணைந்து மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று சென்னை கட்டுமானப் பொறியாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் கோ.வெங்கடாசலம் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் அவர் அளித்த பேட்டி:

கட்டுமானத் துறையின் மிகவும் முக்கியமான மூலப்பொருள் மணலாகும். தமிழ்நாட்டில் உள்ள 25 அரசு மணல் குவாரிகளில் திருச்சி, கரூர், ஆற்காடு உட்பட 5 இடங்களில் உள்ள மணல் குவாரிகள் மட்டுமே செயல்படு கின்றன. மாநிலத்தில் தினமும் 50 ஆயிரம் லோடு மணல் தேவைப் படுகிறது. 20 மணல் குவாரிகளை மூடிவிட்டதால் 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் லோடு மணல் மட்டுமே கிடைக்கிறது. இதனால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதுடன் விலையும் கணிசமாக உயர்ந் துள்ளது. அதிகபட்சமாக தென்காசி யில் ஒரு லோடு மணல் ரூ.29 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

ஒரு கன அடி மணல் எடுக்க ரூ.28 முதல் ரூ.30 மட்டுமே செலவா கும். ஆனால், ஒரு கன அடி மணல் ரூ.42 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் ஒரு சதுர அடி கட்டுமானத்துக்கான செலவு ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது.

தனியார் ஆதிக்கம் காரணமாக மணல் தட்டுப்பாடும், விலை உயர் வும் அதிகரித்துள்ளதால் கட்டு மானத் தொழில் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது. இதுகுறித்து பல முறை அரசிடம் வலியுறுத்திவிட் டோம். ஆனால், எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.

அங்கீகாரம் இல்லாத மனை விற்பனை பதிவுக்கு விதிக்கப்பட் டுள்ள தடையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானப் பணிக்கான அனுமதி வழங்க 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகிறது. இந்த அனுமதியை 10 நாட்களில் தர வேண்டும். மணல் தட்டுப்பாட்டைப் போக்கவும், விலை உயர்வைத் தடுக்கவும் விலை நிர்ணயக் குழு அமைக்க வேண்டும். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து இக்கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம்.

அதன்பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 78 பொறியாளர்கள் சங்கங்களும் சேர்ந்து இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in