

வார்தா புயல் தாக்கத்தால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், பல ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் பூங்கா ஊழியர் குடியிருப்பு, பார்வை யாளர்கள் பகுதி, குடிநீர் இணைப்புகள், சாலைகள், சுற்றுச்சுவர் என பூங்கா வளாகமே புயலால் சின்னாபின்னமானது.
மரங்கள் அகற்றப்பட்டு, சீரமைப்பு பணி கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கிருந்து மரக்கழிவுகள் முழுமையாக இன்னும் அகற்றப்படவில்லை. “மரக்கழிவு கள் அகற்றிய பிறகே பூங்காவை திறக்க வேண்டும். இல்லையெனில் தீ விபத்து ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படும்” என தீயணைப்புத் துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாதுகாப்பு கருதி, பொங்கல் பண்டிகையின் போது பூங்கா திறக்கப்படமாட்டாது என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், பூங்காவில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் நேற்று ஆய்வு செய்தார்.