

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு வழக்கு களில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மேலூர் நீதி மன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் மேலூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ள கிரானைட் முறைகேடு தொடர்பாக ஏராளமான வழக்கு கள் மீதான விசாரணை மேலூர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. அனுமதியின்றி வெட்டி எடுக்கப் பட்ட கற்களை அரசுடமை ஆக்கக் கோரி மாவட்ட ஆட்சியர்கள் 180 வழக்குகளை தாக்கல் செய்துள் ளனர்.
கற்களை வெட்டியதில் முறை கேடு, கடத்தல், வரி ஏய்ப்பு, அரசு நிலம் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து போலீஸ் தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சில வழக்கு களில் ஏற்கெனவே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட் டுள்ளன.
இந் நிலையில், 4 வழக்குகளில் 3,000 பக்கம் குற்றப்பத்திரிகையை நீதிபதி செல்வகுமாரிடம் விசா ரணை அதிகாரி பிரகாஷ் நேற்று தாக்கல் செய்தார்.
பிஆர்பி, ஜிஜி, பிகேஎஸ் உட்பட 4 கிரானைட் நிறுவனங்கள் மீது நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வரு மானவரித்துறை, வணிகவரித் துறை, ஏற்றுமதி, இறக்குமதி நிறு வனங்களிடம் இருந்து சேகரிக் கப்பட்ட ஆவணங்கள் குற்றப்பத் திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
அரசு தரப்பில் தாக்கலான 42 வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன. இந்த வழக்குகளின் விசாரணையை ஜுலை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.