பெரம்பலூர் மந்திரவாதியை காவலில் விசாரிக்க முடிவு

பெரம்பலூர் மந்திரவாதியை காவலில் விசாரிக்க முடிவு
Updated on
1 min read

பெரம்பலூரில் சடலம் மற்றும் மனித மண்டை ஓடுகள், கடல் குதிரைகள் ஆகியவற்றை வைத்து மாந்திரீகம் செய்த மந்திரவாதி கார்த்திகேயனை காவலில் எடுத்து விசாரிக்க வனத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் மயா னத்தில் புதைக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்து வந்து மாந்திரீகம் செய்து வந்த மந்திரவாதி கார்த்திகேயன் என்பவரை பெரம்பலூர் போலீ ஸார் கடந்த 10-ம் தேதி கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து 20 மனித மண்டை ஓடுகள், காய்ந்துபோன நிலையில் காணப்பட்ட 30 கடல் குதிரைகள் உள்ளிட்ட பொருட்களை போலீ ஸார் பறிமுதல் செய்தனர்.

தனக்கு ஆஸ்துமா நோய் உள் ளதால் கடல் குதிரைகளை மருந் தாகப் பயன்படுத்த வைத்திருந்த தாக கார்த்திகேயன் போலீஸாரி டம் தெரிவித்துள்ளார். கடல் குதிரைகள் வேட்டையாட தடை செய்யப்பட்ட உயிரினம் என்ப தால் அவற்றை வனத்துறை யினரிடம் போலீஸார் ஒப்படைத் தனர்.

இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட வனத் துறை அலுவலர் கள் கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடல் குதிரைகளை வேட்டை யாட தடை உள்ள நிலையில் இவற்றை யாரிடம் இருந்து கார்த்திகேயன் வாங்கினார்?, இவர் கடல் குதிரை கடத்தல் தொழிலில் ஈடுபட்டாரா? சர்வதேச கடத்தல் கும்பலுடன் இவருக்கு தொடர்பு உள்ளதா? என பல்வேறு சந்தேகங்கள் வனத் துறை அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. இதனால் கார்த்திகேயனை காவ லில் எடுத்து விசாரிக்க வனத் துறையினர் முடிவு செய்துள்ள னர்.

இந்நிலையில், மாந்திரீகம் செய்வதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டு ஏற்கெனவே 2 முறை போலீஸில் சிக்கியுள்ளவர் என்பதாலும், பொது அமைதிக் குக் குந்தகம் விளைவிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாலும் கார்த்திகேயனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in