முதல் காட்சி தொடங்குவதற்கு முன்பே இணையதளங்களில் வெளியான ‘கபாலி’: படக்குழுவினர், ரசிகர்கள் அதிர்ச்சி

முதல் காட்சி தொடங்குவதற்கு முன்பே இணையதளங்களில் வெளியான ‘கபாலி’: படக்குழுவினர், ரசிகர்கள் அதிர்ச்சி
Updated on
1 min read

திரையரங்குகளில் முதல் காட்சி தொடங்குவதற்கு முன்பே இணையதளங்களில் ‘கபாலி’ படம் வெளியானதால் படக் கு ழுவினர் மற்றும் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கலைப்புலி எஸ்.தாணு தயா ரிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. முன்ன தாக படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம், ‘கபாலி’ படத்தை இணையதளத்தில் வெளியிட தடை விதித்தது. மேலும் 169 இணையதள சேவை நிறுவனங் களுக்கும் தடை விதிக்கப்பட் டிருந்தது.

இந்நிலையில் உயர் நீதிமன்றத் தடையை மீறி நேற்று பகல் 12 மணிக்கு திரையரங்குகளில் முதல் காட்சி தொடங்குவதற்கு முன்பே ‘கபாலி’ படம் இணைய தளங்களில் வெளியானது. சிறிது நேரத்தில் ‘கபாலி’ படத்தின் இணையதள லிங்க் மின்னல் வேகத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடங்களில் பரவத் தொடங்கி யது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் இணை யதளங்களில் இருந்து மின்னல் வேகத்தில் ‘கபாலி’ படத்தை டவுன்லோடு செய்து பார்த்தனர்.

பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ‘கபாலி’ படம் இணையதளத்தில் வெளியா னதை அறிந்த படக்குழுவினரும், ரஜினி ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். முன்னதாக நேற்று முன்தினம் காலையில் ‘கபாலி’ படத்தின் முதல் இரண்டு நிமிட காட்சி இணையதளங்களில் வெளியாகி பேஸ்புக், வாட்ஸ்- ஆப் போன்றவற்றில் பரவியது குறிப்பிடத்தக்கது.

சென்னை மற்றும் புறநகர் பகு தியில் உள்ள திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட ‘கபாலி’ படத்தின் டிக்கெட் ரூ.1,000, ரூ.2,000 என விற்கப் படுவ தாக வருவாய்துறைக்கு ஏராள மான புகார்கள் சென்றன. இதை யடுத்து 20-க்கும் மேற்பட்ட திரை யரங்குகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று தீவிர ஆய்வு நடத்தினர். நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தைவிட அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்தது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்களிடம் அதி காரிகள் விசாரணை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in