

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் தன்ராஜ் நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: டீசல் மீதான ‘வாட்’ வரி உயர்வு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கட்டண உயர்வு, பழைய வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது போன்றவற்றை மாநில அரசு திரும்ப பெறும்வரை லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்.
இதுபோல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் வேலை நிறுத்தப் போராட்டம் திட்ட மிட்டபடி தொடங்குகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் 4.25 லட்சம் லாரிகள், 5 மாநிலங்களிலும் சுமார் 15 லட்சம் லாரிகள் இன்றுமுதல் இயங்காது. இவ்வாறு அவர் கூறினார்.