

ஓசூர் நகராட்சி நில அளவையர் குவளைசெழியனை, மே 27-ல் ஒரு கும்பல் கடத்தி கொலை செய்து சேலம் அருகே காருடன் எரித்தது.
இவ்வழக்கில் தேடப்பட்ட இக்ரமுல்லா, போலீஸில் சரணடைவதாக வாட்ஸ்அப்பில் தகவல் வெளியிட்டார். இந்நிலை யில் இக்ரமுல்லா, நேற்று காலை ஆத்தூர் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.