

திருப்பூரில் கடத்தப்பட்ட பள்ளி சிறுவன் நேற்று மீட்கப்பட்டார். இது தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
திருப்பூர் - அவிநாசி சாலைஸ்டேன்ஸ் முதல் வீதியைச் சேர்ந்தவர் மருத்துவர் செந்தில் கு மார். தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநர். இவரது மகன் ஆர்யநரசிம்மன்(6), திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று காலை வேனில் சென்று பள்ளி வளாகத்தில் இறங்கியுள்ளார் ஆர்யநரசிம்மன். அப்போது அவரைப் பின் தொடர்ந்து சென்ற உறவினர் தேவராஜ்(24), தந்தை அழைப் பதாகக் கூறி சிறுவனை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.
இதைப் பார்த்த வேன் ஓட்டுநர், பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, பள்ளி தரப்பில் பெற்றோரிடம் விசாரிக்கப்பட்டபோது, யாரும் அழைத்துவரக் கூறவில்லை என தெரியவந்தது.
பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானக் காட்சி களைக் கொண்டு, மாநகரப் போலீஸார் மூலமாக மாவட்டம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் தாராபுரம் - பழநி சாலையில் உள்ள காவல் சோதனைச் சாவடியில், சிறுவனுடன் தேவராஜ் சிக்கினார். . அவர்கள், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். சிறுவனை, பெற் றோரிடம் போலீஸார் ஒப்ப டைத்தனர்.
மருத்துவர் செந்தில்குமாரின் மருத்துவமனையில், உறவினர் என்ற அடிப்படையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம் ராசிங்புரத்தைச் சேர்ந்த தேவராஜ் பணிபுரிந்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர், வேலையை விட்டு நின்றதாகத் தெரிகிறது.
செந்தில்குமாரை மிரட்டி பணம் பறிக்க தேவராஜ் திட்டமிட்டு, அவரது மகனைக் கடத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வடக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்து, தேவராஜை கைது செய் துள்ளனர். இவ்வாறு போலீஸார் கூறினர்.