நதியின் புனிதத்தைப் பாதுகாக்க குடகு முதல் பூம்புகார் வரை: காவிரி கரையில் விழிப்புணர்வு நடை பயணம்

நதியின் புனிதத்தைப் பாதுகாக்க குடகு முதல் பூம்புகார் வரை: காவிரி கரையில் விழிப்புணர்வு நடை பயணம்
Updated on
2 min read

காவிரி நதியின் புனிதத்தைப் பாது காக்கவும், தூய்மையாகப் பராமரிக் கவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடகில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு நடை பயணம், காவிரிக் கரையின் வழியாகவே ஆகஸ்ட் 15-ம் தேதி பூம்புகாரைச் சென்றடைகிறது.

அகில பாரதத் துறவியர் சங்கச் செயலாளர் தவத்திரு ராமானந்த சுவாமி தலைமையிலான குழு வினர் இந்த விழிப்புணர்வு நடை பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இயற்கைக்கு எதிராக நீர்நிலை களில் குப்பையை கொட்டுவது, கழிவுகளின் கூடாரமாக நீர்நிலை களை மாற்றுவது ஆகியவற்றால் நதிகளின் தூய்மை மாசடைந்து வருகிறது. இதிலும், குறிப்பாக கோடிக்கணக்கான மக்களின் வாழ் வாதாரமாக விளங்கும் காவிரி நதி தொடர்ந்து மாசுபடுத்தப்படு வதால் அதன் புனிதத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவிரி நதியைத் தூய்மையாகப் பராமரிக்க பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் காவிரி உற்பத் தியாகும் குடகு முதல் காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் வரை ஏறத்தாழ 1,200 கிலோமீட்டர் தொலைவுக்கு ராமானந்த சுவாமிகள் தலைமையிலான குழுவினர் விழிப்புணர்வு நடை பயணத்தை தொடங்கி பல்வேறு மாவட்டங்களைக் கடந்து வந்துகொண்டு இருக்கின்றனர்.

இந்த பயணம் குறித்து ராமா னந்த சுவாமிகள், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

காவிரி நதி என்பது கங்கைக்கு ஒப்பான புனிதம் கொண்டது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக சாயப்பட்டறை, தொழிற்சாலை கழிவுகள், ஆக்கிரமிப்புகள், மணல் கொள்ளை ஆகியவற்றால் அதன் புனிதத்தைப் பாழ்படுத்தி வருகிறோம். முன்பெல்லாம் கோடைக் காலத்தில் கிராமத்தில் உள்ள விவ சாயிகள் ஒன்று சேர்ந்து பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்க ளைத் தூர்வாரி காவிரி நீர் வருகைக்காக காத்திருப்பார்கள். இதற்கு குடிமராமத்து என்று பெயர். இந்த வழக்கமே தற்போது முற்றிலுமாக ஒழிந்துவிட்டது. இதனால் வாய்க்கால்கள் தூர்ந்து, வயல்களுக்கு தண்ணீர் சென்று சேருவதில்லை.

காவிரி நதியைப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து மக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நடை பயணத்தை மேற்கொண் டுள்ளோம். இதுவரை (ஜூலை 13) 775 கிலோமீட்டர் தொலைவைக் கடந்துள்ளோம். வரும் வழியெல் லாம் பொதுமக்கள், விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் நல்ல ஒத்துழைப்பு அளிக்கின்றனர். நீர்நிலைகளைத் தூய்மையாகப் பராமரிப்போம் என பொதுமக்கள், மாணவர்களை உறுதிமொழி ஏற்றுக்கொள்ளவும் செய்கிறோம். இந்த பிரச்சார நடை பயணத்தில், நகரில் சேரும் சாக்கடை நீரை காவிரி நதியில் விடக் கூடாது என உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதி களிடம் வலியுறுத்தி வருகிறோம்.

தமிழக அரசு நீர்வளத்துக்கென தனியாக ஒரு அமைச்சரை நியமித்து, நீர்நிலைகளின் பராமரிப்பை உறுதிப்படுத்த வேண்டும். மத்திய அரசு கங்கை நதியை புனிதப்ப டுத்துவது போன்று, காவிரியைப் புனிதப்படுத்த உரிய நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த நடை பயண யாத்திரையை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

ஆகஸ்ட் 1-ம் தேதி திருச்சி வரும் இக்குழுவினர், ஆகஸ்ட் 15-ம் தேதி பூம்புகாரைச் சென்ற டைய உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in