Published : 23 Apr 2017 11:29 AM
Last Updated : 23 Apr 2017 11:29 AM

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கண்டுகொள்ளாத மத்திய அரசு: அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் ஷோபாஓசா குற்றம்சாட்டினார்.

மாநில மகளிர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நூற்றாண்டு விழா, உலக மகளிர் தின விழா திண்டுக்கல்லில் நேற்று நடை பெற்றது.

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் பி.ஜான்சிராணி தலைமை வகித்தார். மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா, அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு, தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் உட்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளை தேசியமய மாக்கியதால் தான் ஏழைகளும் வங்கிகளுக்கு செல்ல முடிந்தது. பெண்கள் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு குடும்பம் வெற்றி பெற முடியாது. ஆண்களுக்கு இணையாக பெண்கள் என்று சுதந்திரமாக செயல்பட முடி கிறதோ அன்றுதான் முழு சுதந் திரம் கிடைத்ததாக அர்த்தம் என் றார்.

அகில இந்திய மகளிர் காங் கிரஸ் தலைவர் ஷோபாஓசா பேசி யதாவது: பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு குப்பை யில் போட்டு விட்டது. இந்த மசோதாவை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்யவில்லை.

தமிழகத்தில் பாஜக காலூன்ற வழியில்லாததால் பின் வாசல் வழியே காலூன்ற முயற்சி செய்கிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தமிழக விவசாயிகளை பாதுகாக்க மத்திய அரசு வறட்சி நிவாரணத்துக்குப் போதிய நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை என்றார்.

மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராணி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x