Published : 24 Jun 2016 08:26 AM
Last Updated : 24 Jun 2016 08:26 AM

ஹார்வர்ட் பல்கலையில் தமிழுக்கு இருக்கை அமைவதால் தமிழர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்: சென்னையில் நாளை நடக்கும் விழாவில் பிரபலங்கள் விளக்கம்

அமெரிக்காவில் வாழும் தமிழகத் தமிழர்கள், புலம்பெயர்ந்து வாழும் பன்னாட்டுத் தமிழர்கள் ஆகியோரின் பெரும் பங்களிப்புடன் ஹார்வர்ட் பல் கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கை அமையவுள்ளது. இதனால் தமிழ் மொழிக் கும் தமிழர்களுக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கும் விழா தியாகராய நகர் சர். பிட்டி தியாகராயர் அரங்கில் நாளை (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. இதில் பிரபல நீதிபதிகள், தமிழ் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பிரபல பத்திரிகையாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.

380 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறை ஆய்வுகளும் உலக சமுதாயத்தால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இங்கு உலகின் ஏழு செம்மொழி களில் ஒன்றாகிய தமிழுக்கு மட்டும் இருக்கை இல்லை. ஆனால் எஞ்சிய ஆறு மொழிகளான லத்தீன், ஹீப்ரூ, பாரசீகம், கிரேக்கம், சமஸ் கிருதம், சீனம் ஆகியவற்றுக்குத் தனி இருக்கைகள் (Endowed Chair) உள்ளன.

அமெரிக்காவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்களான டாக்டர் ஜானகிராமன், டாக்டர் திருஞானசம்பந்தம் ஆகியோர் இதை மாற்ற முயன்றனர். இவர்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து நிரந்தர இருக்கை அமைப்பதற்குத் தேவையான ரூ.40 கோடியில் ரூ.5 கோடியை நன்கொடையாக அளித்து, இருக்கை அமைக்க அனுமதி பெற்றுள்ளனர்.

சமூகத்தின் இருக்கை

தனிப்பட்ட செல்வந்தர்கள் தங் களின் தாய்மொழிக்கு இருக்கை அமைப்பதற்காகப் பெருந் தொகையை நன்கொடையாக அளித்து அவர்கள் பெயரிலேயே உலகின் முக்கியப் பல்கலைக் கழகங்களில் பல இருக்கைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் தமிழுக்கான இருக்கையில் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும் தமிழ் அமைப்புகளும் பங்கெடுப்பதன் மூலம் இதையொரு சமூகத்தின் இருக்கையாக மாற்ற (Community Chair) ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்புக் குழு முயன்றுவருகிறது.

இதற்காக உலகத் தமிழர்களிடம் நன்கொடைகள் திரட்டிவரும் அதே நேரத்தில் இங்குள்ள தமிழர்களிடமும் அதிகப் பங்களிப்பை எதிர்பார்க்கிறது. இதனால் இருக்கையின் தேவையையும் அவசியத்தையும் அதனால் தமிழுக் கும், தமிழர்களுக்கும் கிடைக்க விருக்கும் நன்மைகளையும் விளக்க, சென்னையில் இந்த விழாவை நடத்துகிறது. விழா குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் தமிழ் இருக்கைக்கு நன்கொடை வழங்கவும் ஹார்வர்ட் தமிழ் இருக்கையின் இந்திய ஒருங்கிணைப்பாளரான முனைவர் எம். ஆறுமுகத்தின் தொலைபேசி எண்ணைத் (98400 31000) தொடர்புகொள்ளலாம். www.harvardtamilchair.com என்ற அதிகாரபூர்வ இணையதளத்தி லும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x